Friday, December 26, 2014

சுகப்பிரசவம் சுலபமே




பிரசவம் என்பது அற்புதம்வலி நிறைந்த ஒரு பயணம் இது.
ஆனாலும்வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப்பறந்தோடிவிடும்உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியேவருகையில்உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாகஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும்ஆனால்இன்றையகாலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச்சிகிச்சை மூலமே நடைபெறுகின்றனவலியையும் வாகை சூடியநெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனைதாய்களால் முடிகிறது?

இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூடஅறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள்,கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டனசுகப்பிரசவம்நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போகவேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும்.அதற்கான 10 ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இங்கேவிளக்குகிறார்கள் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக்அக்தார்ஸ்ரீ கலா பிரசாத்திருச்சி பிகமலம்பிரசவ கால உடற்பயிற்சிஆசிரியர் ரேகா சுதர்சன்...

1.  கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு...

திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும்மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லதுஇந்தக் கலந்தாய்வில்பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல்குடும்ப வரலாறுஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடுதம்பதியில் யாருக்கேனும்ஏதேனும் பரம்பரை நோயோபெண்ணுக்கு தைராய்டுசர்க்கரை நோய்இதயநோய்ஹெபடைடிஸ் பிரத்த அழுத்தம்வலிப்பு நோய்ஹெச்..விபோன்றநோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார்உடல் ரீதியாகவும்மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

2.  உணவை விரும்பு!

கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்திமயக்கம் இருக்கலாம்சிலருக்குஉடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம்சுகப்பிரசவத்துக்கு தாயின்உடல்நிலை இன்றியமையாததுஅதேபோல்குழந்தையின் எடை 3 முதல் 3.5கி.கிவரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாகஇருக்கும்இதனால்உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

3.  எதைச் சாப்பிடலாம்?

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும்.இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவஉணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும்இத்தகைய சமயங்களில்பெண்கள் உணவை வெறுத்தால்அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கிரத்த சோகைக்கு வழிவகுத்துகுழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின்உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும்ஆகவேதொடக்கத்தில்இருந்தே நல்ல   ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

நீர்ச் சத்துக்கு இளநீர்வாந்தியை எதிர்கொள்ள மாதுளைஇரும்புச் சத்துக்குப்பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும்.
 4 மாதத்தில்இருந்து இரும்புச் சத்து மிக்க கீரைகாய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்ஏனெனில்உடலில் இரும்புச் சத்தின் அளவுகுறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும்இந்தஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவைஎடுத்துச் செல்ல உதவுகிறது இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும்தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும்இதனால்போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோமாத்திரைகளையோஎடுத்துக்கொள்வது தேவையாகிறது.  நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ளகாய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்இதனால்,மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும்.

கீரைஓட்ஸ்புதினாஉலர் திராட்சைகொத்தமல்லிபேரீச்சை போன்றஉணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.கொண்டைக்கடலைராஜ்மாபயறு வகைகளில் கால்சியம்புரதச் சத்துஅதிகம் இருக்கிறதுஉருளைகேரட்வேர்க்கடலைபாதாம் பருப்புவகைகளில் புரதம் இருக்கிறதுசர்க்கரைவள்ளிக்கிழங்குநூக்கோல்போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறதுஅன்றாட உணவில்இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்குறைந்ததுதினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால்தாய்க்குநல்லதுகுறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

4.  குனிவளைநிமிர்!

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிகமுக்கியமான ஒன்றுஇது கையில் வளையல் அணிவது போன்றசெயல்பாடுதான்சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ளகையில் எப்படி   நுழையாதோஅதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்துகுழந்தையின் தலை பெரியதாக இருந்தால்குழந்தையின் தலை வெளியேவராமல் மாட்டிக்கொள்ளும்பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்துவீட்டைச் சுத்தம் செய்வதுஅமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டுவேலைகளில் ஈடுபடுவது   நல்லது.

அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும்  கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும்மேலும்உடற்பயிற்சிசெய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும்இதனால்உடல்தசைகள் வலுப்பெற்றுகுழந்தை சரியான நிலையில் இருக்கும்பெண்களின்பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும்பிரசவமும் சுலபமாகும்.தினமும் காலையில்முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

5.  சபாஷ் சரியான எடை!

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரைகூடலாம்ஆனால்சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடைகூடும்.   இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லதுகுழந்தையின்   எடை அதிகமாக இருக்கலாம்இவை இரண்டுமே இல்லைஎன்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம்.இதனால்கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும்பொதுவாகவேகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம்   இருப்பது இயல்புதான்.

ஆனால்இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும்அதுவும்நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும்அப்படி இல்லாமல்கணுக்காலைத்   தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறதுஎன்பதைப் புரிந்துகொள்ளலாம்சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின்அளவைக் கண்டறிந்து,  அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்இத்துடன்ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்தவேண்டியது அவசியம்.

6.  படுக்கையும் உறக்கமும்!

கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம்.  ஆனால்அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய்இருவருக்கும் சாலச்சிறந்ததுஇரவில் எட்டு மணி நேரத் தூக்கமும்பகலில்ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம்முதல் மூன்றுமாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.

7.  ஒரே மருத்துவர்!பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வதுவாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம்பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரைஅணுகுவது நல்லதுநம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும்தெளிவாகத் தெரிந்துகொண்டுஅதற்கேற்ற சிகிச்சையை அளிக்கமருத்துவருக்கு   எளிதாக இருக்கும்.

8.  தவறாத மருந்துகள்!

தாய்சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்கநான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசிபோடவேண்டும்ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலேபெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லதுஏனெனில்இது கர்ப்ப காலத்தில்குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும்.ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லதுஊசி தேவைப்படலாம்தவிரஅவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும்மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்இந்த மருந்துகளைத் தவறாமல்எடுத்துக்கொள்வது முக்கியம்.

9.  கூடாது... கூடாது... கூடவே கூடாது!

வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவதுஓடுவதுகுடத்தைஇடுப்பில் வைப்பதுநாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையானசெயல்களில் ஈடுபடவே கூடாதுதரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்கவேண்டும்கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாதுஅடிக்கடிகால்களை   நீட்டிமடக்க வேண்டும்அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக்கூடாதுஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும்இதனால் உடலில் தசைப்பிடிப்புகால்கள் மரத்துப்போதல்போன்றவை ஏற்படாமல் இருக்கும்ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்வெஸ்டர்ன்டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்இப்போதையபெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர்.  இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக  நீட்டிமடக்க முடியும்நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாதுதேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம்.இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

10.  அகமே சுகம்!
தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம்சுகப்பிரசவத்துக்குஇன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரியஎதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம்இந்தப்பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும்.
 'இது ஒரு பிரச்னையேஇல்லைஉனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர்தவறக் கூடாதுதாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாகவைத்துக்கொள்ள வேண்டும்தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை,நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில்கவனம் செலுத்த வேண்டும்கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்தவிர்த்தல் நலம்தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடுதேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத்தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.
நன்றி : விகடன்