Sunday, September 21, 2014

பாரதத்தின் பெருமை

Barathmatha
நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில்   இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாகப் பேசுகின்றனர்
இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம்.  மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.
ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும் ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
அறிவியல் :
*சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் – மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் – கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளைப் (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.

*இரத்தம் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவக் கடவுளாகக் கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.

*அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.
வானவியல்:
ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். “ஓ, சூரிய கடவுளே அரை நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்” ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.

*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு.1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.
*வேதங்களின்படி, ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாளில் இருந்து இன்றைய நாளினைக் குறிக்கிறோம்.”த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே” என்று வரும். இதன்படி

ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்)
ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 மகாயுகம்
ஒரு கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.
நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.
கணிதம்:
கி.மு -3000 – நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.
கி.மு 1500 – வேதகாலம் – வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.
கி.மு 200 – பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.
கி.பி 400 – 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.
ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.
நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.
யோகா:
இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.
காஷ்யப ரிஷி – முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.
                                             

Written by: Vivekanandadasan.

No comments:

Post a Comment