Saturday, March 9, 2013

மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும்

“சிவம்” என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். கோபக்காரர், அழிப்பவர், துடைப்பவர் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய(பாவம்), பொய் என்று நாம் உணர வேண்டும்

மாசிமாதம் அமாவாசைக்கு முன்னாள்(சதுர்த்தசி திதி) சிவராத்திரி எனக் கொள்ளப்படுகின்றது. சிவபெருமானார் வழிபாட்டிற்கு உரிய இரவு என்பது பொருளாகும். ஏன் இந்த நாளைச் சிவராத்திரி என்கிறோம் என்று சிந்திப்போம்.

திருமாலும் பிரமனும் தாமே உயர்ந்தவர்கள் என்று சண்டையிட்டுக் கொண்டார்கள். இவர்களது ஆணவத்தை போக்குவதற்காக, அன்பே வடிவான சிவபரம்பொருள் அவ்விருவருக்கும் இடையே, அடியும் முடியும் காணமுடியாத சிவசோதியாய் – பேரொளிப் பிழம்பாய் (நின்றார்) தோன்றினார். அந்த நாள்தான் சிவராத்திரி எனப்படுகின்றது.
"மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும்"
நன்றி: சிவத்திரு ஆ.பக்தவச்சலம், ஆசிரியர், தமிழ் வேதம் மாத இதழ்
“சிவம்” என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். கோபக்காரர், அழிப்பவர், துடைப்பவர் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய(பாவம்), பொய் என்று நாம் உணர வேண்டும்
மாசிமாதம் அமாவாசைக்கு முன்னாள்(சதுர்த்தசி திதி) சிவராத்திரி எனக் கொள்ளப்படுகின்றது. சிவபெருமானார் வழிபாட்டிற்கு உரிய இரவு என்பது பொருளாகும். ஏன் இந்த நாளைச் சிவராத்திரி என்கிறோம் என்று சிந்திப்போம்.
திருமாலும் பிரமனும் தாமே உயர்ந்தவர்கள் என்று சண்டையிட்டுக் கொண்டார்கள். இவர்களது ஆணவத்தை போக்குவதற்காக, அன்பே வடிவான சிவபரம்பொருள் அவ்விருவருக்கும் இடையே, அடியும் முடியும் காணமுடியாத சிவசோதியாய் – பேரொளிப் பிழம்பாய் (நின்றார்) தோன்றினார். அந்த நாள்தான் சிவராத்திரி எனப்படுகின்றது.
அக்காலம் மாசிமாதம், அமாவாசைக்கு முன்நாள் ( சதுர்த்தசி திதி) திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம் கூடிய மேலான புண்ணிய காலம்.
அப்படி பேரொளிப் பிழம்பாய்ப் பரம்பொருள் எழுந்தருளிய காலம், இரவு 11.30 மணிக்கு மேல் 1.00 மணி வரையிலான காலமாகும்.
சிவராத்திரி விரதம் இருத்தல் என்பார்கள். வடமொழியில் இதனை உபவாசமிருத்தல் என்பார்கள். உப என்றால் சமீபம்; வாசம் என்றால் வசித்தல். அதாவது, உபவாசம் – விரதம் எனும் சொல்லிற்குச் சமீபத்தில் வசித்தல் என்பது பொருளாகும். சிவராத்திரி நாள் முழுவதும் நாம் சிவபெருமானுக்குச் சமீபத்தில் இருக்கவேண்டும் என்பது பொருளாகும். அன்று முழுவதும் நமது மனம் இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். மனம், மொழி, மெய்(உடம்பு) இம்மூன்றும் சிவராத்திரி நாளன்று சிவத்திடமே இருக்க வேண்டும். நிறைய உணவு உட்கொண்டால் மனம் சிவச்சிந்தனையில் மூழ்காது, தூக்கம் வரும்; உலகியலில் செல்லும். எனவே, சிவராத்திரி அன்று பகலில் பால், பழம் இவை உண்டும், இரவில் உறக்கம் வராமல் இருக்க உணவு உண்ணாமலிருந்தும், சிவ வழிபாட்டினைச் செய்தல் நலம்.
அன்று இரவு முழுவதும் கண் விழித்துச் சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும். சிவாலயம் வலம் வருதல், திருமுறைகளை ஓதுதல், திருஐந்தெழுத்தினைச் (சிவாயநம) செபித்தல், கூட்டு வழிபாடு செய்தல் ஆகியவற்றால், அன்று இரவை கழித்தல் நலம். இந்த ஒருநாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூசை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் அனுபத்தால் கூறியுள்ள உண்மையாகும்.
சிறிய வழிபாட்டினால் பெரிதும் மகிழ்ச்சி அடைபவர் சிவபெருமானார். அதிலும் சிவராத்திரி போன்ற புண்ணிய நாட்களில் வழிபடுதல் அளவிளா நன்மைகள் அளிக்கும்.
எல்லா உயிர்களும் ஒடுங்கும் கற்ப முடிவின் இரவில் நான்கு யாமத்தும் உமை அம்மையார் சிவபெருமானாரை விதிப்படி பூசித்து மகிழ்ந்த இரவே சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. இந்நாளில் வழிபடுகின்ற அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் அருள வேண்டும் என்று இறைவி வேண்ட, இறைவரும் அவ்வாறே அருள் புரிந்து, காத்தருள் புரிவதாகத் திருவாய் மலர்ந்தருளினார்.
அக்காலம் மாசிமாதம், அமாவாசைக்கு முன்நாள் ( சதுர்த்தசி திதி) திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம் கூடிய மேலான புண்ணிய காலம்.

அப்படி பேரொளிப் பிழம்பாய்ப் பரம்பொருள் எழுந்தருளிய காலம், இரவு 11.30 மணிக்கு மேல் 1.00 மணி வரையிலான காலமாகும்.

சிவராத்திரி விரதம் இருத்தல் என்பார்கள். வடமொழியில் இதனை உபவாசமிருத்தல் என்பார்கள். உப என்றால் சமீபம்; வாசம் என்றால் வசித்தல். அதாவது, உபவாசம் – விரதம் எனும் சொல்லிற்குச் சமீபத்தில் வசித்தல் என்பது பொருளாகும். 
சிவராத்திரி நாள் முழுவதும் நாம் சிவபெருமானுக்குச் சமீபத்தில் இருக்கவேண்டும் என்பது பொருளாகும். அன்று முழுவதும் நமது மனம் இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். மனம், மொழி, மெய்(உடம்பு) இம்மூன்றும் சிவராத்திரி நாளன்று சிவத்திடமே இருக்க வேண்டும். நிறைய உணவு உட்கொண்டால் மனம் சிவச்சிந்தனையில் மூழ்காது, தூக்கம் வரும்; உலகியலில் செல்லும். எனவே, சிவராத்திரி அன்று பகலில் பால், பழம் இவை உண்டும், இரவில் உறக்கம் வராமல் இருக்க உணவு உண்ணாமலிருந்தும், சிவ வழிபாட்டினைச் செய்தல் நலம்.

அன்று இரவு முழுவதும் கண் விழித்துச் சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும். சிவாலயம் வலம் வருதல், திருமுறைகளை ஓதுதல், திருஐந்தெழுத்தினைச் (சிவாயநம) செபித்தல், கூட்டு வழிபாடு செய்தல் ஆகியவற்றால், அன்று இரவை கழித்தல் நலம். 
இந்த ஒருநாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூசை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் அனுபத்தால் கூறியுள்ள உண்மையாகும்.

சிறிய வழிபாட்டினால் பெரிதும் மகிழ்ச்சி அடைபவர் சிவபெருமானார். அதிலும் சிவராத்திரி போன்ற புண்ணிய நாட்களில் வழிபடுதல் அளவிளா நன்மைகள் அளிக்கும்.
எல்லா உயிர்களும் ஒடுங்கும் கற்ப முடிவின் இரவில் நான்கு யாமத்தும் உமை அம்மையார் சிவபெருமானாரை விதிப்படி பூசித்து மகிழ்ந்த இரவே சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. 
இந்நாளில் வழிபடுகின்ற அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் அருள வேண்டும் என்று இறைவி வேண்ட, இறைவரும் அவ்வாறே அருள் புரிந்து, காத்தருள் புரிவதாகத் திருவாய் மலர்ந்தருளினார்.

No comments:

Post a Comment