மண்ணில் வேர்வை விழ உழைத்த உழவனுக்கு
அவ்வாண்டு பெரும் அறுவடை நிச்சயம்
அறுசுவை படைத்த தாய்க்கு
மைந்தர் தரும் மனமகிழ்ச்சி நிச்சயம்
கல்விக்கு வழி வகுத்த தந்தைக்கு
பிள்ளையின் நன்றிக்கடன் நிச்சயம்
கண்விழித்து படித்த மாணவர்க்கு
தேர்வில் வெற்றி நிச்சயம்
உயர் கல்வி போதித்த ஆசானுக்கு
பள்ளியின் வெற்றி நிச்சயம்
அவரவர் கடமையை கருத்தே செய்தால்
வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் நிச்சயம்
அன்புடன்
No comments:
Post a Comment